SuperTopAds

பெண் நோயியல் மருத்துவமனையை பொருத்தமான இடத்தில் நிறுவுங்கள்.

ஆசிரியர் - Editor I
பெண் நோயியல் மருத்துவமனையை பொருத்தமான இடத்தில் நிறுவுங்கள்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் நோயியல் மகப்பேற்று சிறப்பு மருத் துவமனையை சிறந்த ஒரு இடத்தில் அமைக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 


வடமாகாணத்தில் சுகாதார துறையை மேம்படுத்தும் செயற் றிட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் கடன் அடிப் படையிலான நிதி உதவியின் கீழ் வடமாகாணத்தில் 5 மா வட்டங்களிலும் ஒவ்வொரு வைத்தியசாலைகள்

அமைக்கும் செயற்றிட்டம் மாகாண சுகாதார அமைச்சினா ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதற்கமைய கிளிநொச்சி பொது வைத்தியசாலை வளாகத்தில் பெண் நோயியல் சிற ப்பு வைத்தியசாலையை அமைக்க முயற்சிக்கப்படுகிறது.


ஆனால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வ ளாகம் அதற்கு பொருத்தமானது அல்ல. எனவே மாற்றுக் காணி ஒன்றை தேர்வு செய்து அமைக்கும்படியே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தற்போது க ண், எலும்பு முறிவு, தோல் சிகிச்சை, இருதய நோய் சிகி ச்சை, விபத்து பிரிவு போன்ற வசதிகள் இல்லாமல் இயங் கிக் கொண்டிருக்கின்றது. 


சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திர தொகுதி இருந்தும் சிகிச்சை வழங்க முடியாத நிலையில் மாவட்ட பொது வைத்திய சாலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில்,


பெண் நோயியல் சிகிச்சை பிரிவையும் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்க நடவடிக்கை எடு ப்பது பொருத்தமற்றது. எனவே குறித்த வைத்தியசாலைi ய பொருத்தமான வேறு இடத்தில் நிறுவவேண்டும்.


என மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் அமைப்புக்க ள் மற்றும் சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ள ன.