SuperTopAds

இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் நீர்­மட்டம் வீழ்ச்சி: கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள சிறு­போகச் செய்கை

ஆசிரியர் - Admin
இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் நீர்­மட்டம் வீழ்ச்சி: கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள சிறு­போகச் செய்கை

கிளி­நொச்சி இர­ணை­ம­டுக்­கு­ளத்தின் நீர் மட்டம்  தற்­போது 16.6 அடி­யாக இருப்­ப­தனால் சிறு­போகச் செய்கை கேள்­விக்­குள்­ளா­கி­யுள்­ளது என நீர்ப்­பா­சனத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.


முன்­னைய காலங்­களில்  இர­ணை­ம­டுக்­கு­ளத்தில் 30 அடிக்கு நீர் சேமிக்­கப்­ப­டு­கின்ற போது பெப்­ர­வரி, மார்ச் மாதங்­களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடி­யாக காணப்­படும்.

இந்த நிலையில்  இக்­கு­ளத்தின் கீழ் 8000 ஏக்கர் சிறு­போக நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது.


ஆனால்  கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் நிதி­யு­த­வியின் கீழ் இர­ணை­ம­டு­க்குளம் புன­ர­மைக்­கப்­பட்டு குளத்தின் நீரின் கொள்­ள­ளவு 36 அடி­யாக உயர்த்­தப்­பட்­டது. கடந்த பருவ மழை  போது­மா­ன­தாக இல்­லா­மையால்  புன­ர­மைக்­கப்­பட்ட  குளத்தில் நீர் சேமிக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. இந்த நிலை தொட­ரு­மானால் இவ்­வ­ருடம் சிறு­போக விதைப்பு சாத்­தி­யப்­ப­டாது போய்­விடும் என நீர்ப்­பா­சனத் திணைக்­களம் குறிப்­பி­டு­கி­றது.