பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றினர் ஜீவன் தொண்டமான்!

ஆசிரியர் - Admin
பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றினர் ஜீவன் தொண்டமான்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான், இன்று நடைபெற்ற இ.தொ.காவின் பேராளர் மாநாட்டில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து, தலைமைத்துவப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. தலைவர் நியமிக்கப்படும்வரை, இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டு இ.தொ.கா வழிநடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று பேராளர் சபை கூட்டப்பட்ட போது,, ஜீவன் தொண்டமானை பொதுச்செயலார் பதவிக்கு நியமிக்குமாறு இ.தொ.கா வின் உபதலைவர் செல்லமுத்து பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.

பிரேரணையை இ.தொகா உபதலைவர் செல்லமுத்து முன்மொழிய மற்றோர் உபதலைவரான ஜெயராம் வழிமொழிந்தார். இதனையடுத்து பிரேரணை நிறைவேற்றப்பட்டு இ.தொ.காவின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இ.தொ.காவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த அனுஷியா சிவராஜா, உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு