யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காட்டில் பதற்றம்..! பெருமளவு மக்கள் கூடியதால், இராணுவம் பொலிஸ் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காட்டில் பதற்றம்..! பெருமளவு மக்கள் கூடியதால், இராணுவம் பொலிஸ் குவிப்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காடு பகுதியில் இன்று காலை தனியார் ஒருவர் ஊடாக மணல் அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை எதிர்த்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் கூடியதால் பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டது. 

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மணல் அகழ்வதற்கான உரித்து தனியாார் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பின்னுாட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவர் உள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த வர்த்தகர் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வெளியில் இருந்து ஆட்களை கொண்டுவந்து மணல் அகழ்வதற்கு முயற்சித்துள்ளார். 

ஏற்கனவே பிரதேச செயலகம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் பிரதேச மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். எனினும் அது மீறப்பட்ட நிலையில் மணல் அகழ்வை எதிர்த்து நுாற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாாரும், இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு சமாதானம் பேசப்பட்டதுடன், பாதுகாப்பும் வழங்கப்பட்டது. 

பின்னர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தனும் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்த நிலையில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் பேசி குறித்த பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்கு முன் தீர்வு காணப்படவேண்டும். 

இல்லையேல் மீண்டும் போராட்டம் நடாத்துவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு