சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை!
இலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் உமா சந்திரபிரகாஸ்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்து மக்களும் இலங்கையில் சம உரித்தை கொண்டவர்கள் என்பதை வலியுறுத்த சஜித் பிறேமதாசா உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆட்சியின் கீழ் பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
ஆண்டின் தொடக்கமான ஜனவரி முதல் மார்ச் வரையாக 95ஆயிரத்து 908 பெண்கள் தொழில்வாய்ப்பு தேடி அரபிய நாடுகளிற்கு சென்றுள்ளனர்.
மறுபுறம் கொரொனா தொற்றினால் அண்மை நாட்களில் பெருமளவு பெண்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.
மாதம் 30ஆயிரத்தை வருமானமாக ஈட்டிய பெண்ணிற்கு இந்த அரசு ஜயாயித்தை வழங்க இழுத்தடிக்கின்றது.
அதிலும் ஆளுங்கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் தரகு வேலை பார்க்கின்றனர்.
வடகிழக்கில் பெருமளவிலான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருப்பதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாதிருக்கின்றனர்.அதனால் அவர்களிற்கு வீடு கூட கிட்டவில்லை.
இது தொடர்பில் சஜித் பிறேமதாச அக்கறை கொண்டுள்ளார்.
அவரது தந்தையார் பிறேமதாசா 82ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்தவர் என்பது தெரிந்ததே.
நிச்சயம் எமது மக்களிற்கு நீதியானதும் இன மத வேறுபாடற்ற அரசியல் தீர்வொன்றை பெற்று வழங்கவும் தான் பாடுபடப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.