தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ரவிராஜ் சசிகலாவின் ஊடக சந்திப்பு LIVE

ஆசிரியர் - Admin

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்பெண் வேட்பாளர் திருமதி சசிகலா ரவிராஜ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே 

எனது முதலாவது பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.யாழ்.ஊடக மையத்தில் இன்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்கடந்த 14 ஆண்டுகளாக யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சி பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்கள்சார்பாக பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. 

நானும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் வலிகளை உணர்ந்தவள் அவர்களுக்காக எனது கணவரின் சேவையைத் தொடர்வதற்கே தற்போதைய அரசியலுக்குள் பிரவேசித்துள்ளேன். வடக்கு கிழக்கில் எத்தனையோ ஆயிரம் விதவைகள் பெண் தலைமைக்குடும்பங்கள் உள்ளன. 

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நானும் ஒருவராக இருக்கின்றேன். எனினும் நான் நிரந்தரமாக ஒரு தொழிலில் இருந்தமையினால் எனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்கமுடிந்தது. ஏனைய பல குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஒரு குறிக்கப்பட்ட கட்டமைப்புக்குள் கஸ்ரப்பட்டு வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் யுவதிகள் ஆகியோரின் கல்வி தொழில் துறை தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டிய தேவையுள்ளது.நடைபெறவுள்ளபொதுத் தேர்தலில் 

எனது வெற்றியை சாதகமாகவே நான் பார்க்கின்றேன். எனது கணவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் கொள்கைகள் சேவைகள் எவ்வாறு இருந்ததே அதே பணியை நானும் தொடர விரும்புகின்றேன். எனவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் எனனது கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்து 

எனது விருப்பிலக்கத்திற்கும் எனக்கு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கவேண்டும்தேர்தலில் போட்டியிடுபவர்க்ள வெற்றிபெற்றால் அது செய்வோம் இது செய்வோம் என்று கூறுவார்கள் எனினும் நான் பாதிக்கப்பட்ட பெண் என்ற வகையில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகளுக்கு 

முன்னுரிமை கொடுப்பேன் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எனது முதலாவது பணி என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு