யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்திய வியாபாரிக்கு கொரோனாவா..? இல்லையா..? இந்த கேள்விகளுக்கு பதில் உங்களுக்கு தொியுமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் தங்கியிருந்த இந்திய வியாபாரிக்கு கொரோனாவா..? இல்லையா..? இந்த கேள்விகளுக்கு பதில் உங்களுக்கு தொியுமா?

இணுவிலில் இருந்து இந்தியா சென்ற வியாபாரிக்கு கொரோனோ என 8 ஆம் திகதி மாலை காலைக்கதிரிலும் , 09ஆம் திகதி ஏனைய ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. செய்தி வெளியான 08ஆம் திகதி இந்திய துணைத்தூரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு உத்தியோக பூர்வமாக தெரியாது. 

என அவர்கள் தெரிவித்தார்கள் எனவும் , தமக்கு உத்தியோக பூர்வமாக தகவல்கள் கிடைக்காத போதிலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 13 பேரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதில் அவர்களுக்கு கொரோனோ தொற்று இல்லை என வடமாகாண சுகாதார பணிமையினர் அறிவித்தனர். எனவும் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் 13 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வியாபரிக்கு கொரோனோ தொற்று இல்லை எனவும் 09ஆம் திகதியே அவர் திண்டுக்கலில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார் எனவும் செய்தி வெளியாகி உள்ளது. 

அது தொடர்பில் வடமாகாண சுகாதார பணிமனையினர் தமக்கு உத்தியோக பூர்வமாக இந்தியாவில் இருந்து தகவல் வரவில்லை எனவும் அதனால் யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பர்கள் என தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்றைய 14ஆம் திகதி உதயன் பத்திரிகையில் இந்திய வியாபாரிக்கு கொரோனோ வந்தே மீண்டார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார் என செய்தி வெளியாகியுள்ளது. 

இப்ப என்ன கேள்வி என்றால். யாழில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்கு பின்னர் சமூக தொற்று இல்லை. 

இந்நிலையில் யாழில் இருந்தவருக்கு எவ்வாறு கொரோனோ தொற்றியது ????

யாழில் தொற்ற சாத்தியம் இல்லை எனில் ,யாழில் இருந்து இந்தியா பயணமாக மே 29 ஆம் திகதி கொழும்பு சென்ற வியாபரி , மறுநாள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தங்கி இருந்து இந்தியா பயணமாகி உள்ளார். 

ஜூன் முதலாம் திகதி இந்தியா போனதும் பரிசோதனையில் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டதாக 08 ஆம் திகதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. 

கொழும்பில் தொற்றி இருந்தால், தொற்று ஏற்பட்டு ஓரிரு நாளில் தொற்று இனம் காண முடியுமா ?

அவ்வாறு தொற்று இனம் காணப்பட்டு இருந்தாலும் மறுபடி ஒரு கிழமையில் பரிசோதனையில் தொற்று இல்லை என அவரை வீடு செல்ல அனுமதித்துள்ளனர். 

அவ்வாறு எனில் ஒரு கிழமைக்குள் கொரோனோவில் இருந்து மீள முடியுமா? வியாபரிக்கு கொரோனோ தொற்று என இந்தியா உறுதிப்படுத்தி, மருத்துவ சான்றிதழ் 09ஆம் திகதிக்கும் 13ஆம் திகதிக்கு இடையில் தந்ததா ?வியாபாரிக்கு கொரோனோ தொற்று இருந்ததை வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை உறுதிப்படுதியதா ?

நன்றி- மயூரப்பிரியன்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு