தேசிய வைத்தியசாலைக்குள் போலி துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையிட்ட மருத்துவர் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது..!
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் போலி துப்பாக்கியுடன் நுழைந்து ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுக்கான 79 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட மருத்துவர்,
அனுராதபுரம் பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற 63 லட்சம் ரூபாய் கொள்ளை சம்பவத்துடனும் தொடர்புடையவரா என தீவிர விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியில்
இந்த வைத்தியர் அங்கு கடமையில் இருந்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற வைத்தியரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்திருந்தார்.
48 மணி நேர விசாரணையின் பின் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.