வைத்தியசாலை ஊழியர்போல் வேடமிட்டு 50 கிராம் ஹெரோயின் கடத்திய பெண் கைது..! யாழ்.அரியாலையில் பொலிஸார் அதிரடி..

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலை ஊழியர்போல் வேடமிட்டு 50 கிராம் ஹெரோயின் கடத்திய பெண் கைது..! யாழ்.அரியாலையில் பொலிஸார் அதிரடி..

வைத்தியசாலை ஊழியர்போல் மோட்டார் சைக்கிளில் மருத்துவ குறியீடு பொறித்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய பெண் யாழ்.அரியாலை பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 

நடாத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியமான நபர் சிறையில் உள்ளதாகவும், 

அவரே இவற்றை வழிநடத்துவதாகவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு