பிரகீத் எக்னெலிகொட வழக்கு- செப்டெம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியமை மற்றும் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிரான வழக்கை, செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நேற்று தீர்மானித்தது.
சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜேரத்ன, கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தினாலேயே, இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது.
எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவின் சாட்சியத்துடன், இவ்வழக்குக்கான சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென, வழக்கு தொடர்பில் மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மன்றில் அறிவித்தார்.