முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரதன பிணையில் விடுதலை!
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜித சேனாரத்னவின் பிணை மனு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, ராஜித சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.