நயினை நாகபூசணி அம்மன் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி..! அன்னதானமும் நிறுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
நயினை நாகபூசணி அம்மன் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி..! அன்னதானமும் நிறுத்தப்பட்டது..

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் தீவை சேர்ந்தவர்கள் 30 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் 

இன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா 

இம்மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாள்கள் இடம்பெறவுள்ளது.நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். 

அதேவேளை மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.எனவே இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் 

குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.அதேவேளை தேர், சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு