டக்ளசின் கையில் ஹூலின் 'குடுமி'?
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவை வெளியில் வரலாம் என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று நடத்திய மக்கள் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் இன்று நேற்று அல்ல, நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய- பக்கசார்பான- குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய, கருத்துக்களைத் தான் தெரிவித்து வருபவர்.அவரது இவ்வாறான செயற்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
ரட்ணஜீவன் ஹூல் முன்னர் பணியாற்றிய இடங்களிலும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. அவருடைய வரலாற்று ரீதியான சர்சைகள் தொடர்பாக, என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றன. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம். ரட்ணஜீவன் ஹூல் எவ்வாறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரானார் என்று எனக்குத் தெரியவில்லை” எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.