SuperTopAds

வவுனியா- தேக்கவத்தை பகுதியில் தொலைபேசி கம்பத்துடன் கார் மோதி விபத்து!

ஆசிரியர் - Admin
வவுனியா- தேக்கவத்தை பகுதியில் தொலைபேசி கம்பத்துடன் கார் மோதி விபத்து!

வவுனியா- தேக்கவத்தை பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியாவில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த கார், இன்று அதிகாலை 1 மணியளவில் வவுனியா - தேக்கவத்தை பகுதியில், தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தில், காரை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பயணம் செய்த கார் பலத்த சேதமடைந்தது என்றும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.