யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணின் மரணம் தொடர்பில் மருத்துவர்கள் விளக்கம்..! எலி காய்ச்சலுக்கான சகல அறிகுறிகளும் காணப்பட்டதாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணின் மரணம் தொடர்பில் மருத்துவர்கள் விளக்கம்..! எலி காய்ச்சலுக்கான சகல அறிகுறிகளும் காணப்பட்டதாம்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணுக்கு எலி காய்ச்சலுக்கான சகல அறிகுறிகளும் இருந்ததாக கூறும் மருத்துவர்கள், 

பரிசோதனை முடிவுகளின் பின்பே 100 வீதம் உறுதியான தகவலை வெளியிட முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே மருத்துவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், குறித்த பெண் 3ம் திகதி மாலை 

போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் 5 நாட்கள் அவர் தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். 

அவருக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருடைய உடலில் குருதி அமுக்கம் மிக குறைந்தளவில் இருந்தது. மேலும் ஈரல், சிறுநீரகம், இரத்த வெண்கலங்கள் அதிகரிப்பு போன்ற எலிகாய்ச்சலுக்கான

முக்கிய அறிகுறிகள் காணப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் அவருடைய சுவாச பையில் தொற்று ஏற்பட்டது. எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு

சுவாசபை தொற்று ஏற்பட்டால் அவரை காப்பாற்றுவது மிக கஸ்டம். அதேபோல் குறித்த பெண்ணும் உயிரிழந்தார். அவருக்கு எலி காய்ச்சலுக்கான சகல அறிகுறிகளும் காணப்பட்டது. எனினும் உறுதியாக அதனை கூற முடியாது. 

என மருத்துவர்கள் மேலும் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு