தமிழரசு கட்சி கூட்டத்தை நடத்த விடாதீர்கள்..! சுகாதார பிரிவுக்கு அநாமதேய நபர்களும், பொலிஸாரும் அழுத்தம்.. இறுதியில் நடந்தது என்ன தொியுமா?

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சி கூட்டத்தை நடத்த விடாதீர்கள்..! சுகாதார பிரிவுக்கு அநாமதேய நபர்களும், பொலிஸாரும் அழுத்தம்.. இறுதியில் நடந்தது என்ன தொியுமா?

தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளைக்கூட்டம் சுகாதார பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸாரின் உத்தரவிலேயே சுகாதார பிரிவினால் கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

கட்சியின் மாவட்டக் கிளைக் கூட்டம் நேற்று மாலை இடம்பெறவிருந்த நிலையில் இருவர் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கொரோனா காரணமாக 

சுகாதார முன்னெச்சரிக்கையின் கீழ் தடுத்து நிறுத்துமாறு கோரிய நிலையில் நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் பொலிசாரும் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு 

குறித்த கூட்டத்தினை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை தமிழ் அரசுக் கட்சியின் தலமை அலுவலகம் அமைந்துள்ள மாட்டீன் வீதி அலுவலகத்திற்குச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி 

குறித்த கலந்துரையாடலின் விபரத்தினையும் அதில் பங்குகொள்வோர் எண்ணிக்கையினையும் கேட்டறிந்த நிலையில் அங்கே பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான 

அறிவுறுத்தலையும் வழங்கிச் சென்றார். அதன் பிரகாரம் தற்போது 60 முதல் 100 பேர் வரையில் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் 

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.கிளையில் மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள கிளைகளில் இருந்து தலா ஐவர் வீதம் மொத்தமாக 50 பேரே அங்கம் வகிப்பதனால்

100 வீத வரவு உறுதி செய்யப்பட்டாலும் 50 பேர் என்ற எண்ணிக்கையினை தாண்டாது என்ற விபரமும் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடாத்த தடை இல்லை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு