பாலைவன வெட்டுக்கிளிகளால் வடக்கிற்கு ஆபத்து இல்லை!

ஆசிரியர் - Admin
பாலைவன வெட்டுக்கிளிகளால் வடக்கிற்கு ஆபத்து இல்லை!

பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பாக வடக்கு மாகாண விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று வடக்கு மாகாண விவசாய திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக விவசாயிகள் மத்தியில், எழுந்துள்ள அச்சம் தொடர்பாக, இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம பகுதியில், வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. இது ஒரு மஞ்சள் புள்ளிகள் கொண்ட ஒருவகை வெட்டுக்கிளி என மத்திய விவசாயத் திணைக்களத்தின் ஊடாக அறிவித்திருந்தார்கள்.

இது வழமையாக இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளி இனமே தவிர, பாலைவன வெட்டுக்கிளி அல்ல. இந்த வகையான வெட்டுக்கிளிகளால் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எனினும் அவற்றின் படையெடுப்பு நிகழ்ந்தால், அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம் என்றும் வடக்கு மாகாண விவசாய திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு