யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போன்களுக்கு தட்டுப்பாடு..! விலையும் சடுதியாக அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போன்களுக்கு தட்டுப்பாடு..! விலையும் சடுதியாக அதிகரிப்பு..

யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா இடர்நிலையினாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். 

மேலும் தொலைபேசிகளின் விலை 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரையில் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

கொரோனா இடர்நிலமையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், அலுவலக செயற்பாடுகள், பல வர்த்தக செயற்பாடுகளும் கூட இணையவழிக்கு உரையாடல் மூலம் இடம்பெற்றுவரும் நிலையில், 

அதிகளவான நுகர்வும் தொலைபேசி தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணி என கூறப்படுகின்றது. மறுபக்கம் இறக்குமதி செயற்பாடுகளில் உள்ள தடைகளும் அதற்கு காரணமாக அமைந்துள்ளன. 

இது குறித்து யாழ்.மாவட்டத்திலுள்ள சில வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த காலப்பகுதியில் மாவட்டத்தில் அதிகளவான நுகர்வு இடம்பெற்றிருப்பதாகவும், 

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் அதிக விலை கொடுத்தேனும் தொலைபேசிகளை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளதுடன், 

தொலைபேசி விநியோகஸ்த்தர்களிடமே தொலைபேசி தற்போது இல்லை எனவும் கூறுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு