15 வயது சிறுவனை காடையர்களுடன் இணைந்து தாக்கிய 3 பொலிஸார் பணியை இழந்தனர்..! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்..
அளுத்கம- தர்காநகர் பகுதியில் 15 வயதான ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது தாக்குதல் நடாத்திய 3 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும், வீதியில் நின்ற காடையர்களும் இணைந்து குறித்த சிறுவனை வீதியில் இழுத்து சென்று மூர்க்கத்தனமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியானதுடன்,
சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனங்களை தொிவித்திருந்தனர்.
இதனையடுத்து சிறுவன் மீது தாக்குதல் நடாத்திய உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் அடங்கலாக 3 பேர்
அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.