நாடாளுமன்ற தேர்தல் ஜீன்- 20ம் திகதி..! எதிரான 7 மனுக்கள் விசாரணைக்கு கூட எடுக்கப்படாமல் தள்ளுபடி..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தல் ஜீன்- 20ம் திகதி..! எதிரான 7 மனுக்கள் விசாரணைக்கு கூட எடுக்கப்படாமல் தள்ளுபடி..

தேர்தல் அறிவிப்பை கேள்விக்குள்ளாக்கி உயர் நீதிமன்றில் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு வழப்பியிருக்கின்றது. 

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் 

விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா என இன்று உயர் நீதிமன்றம் தீர்மானித்த நிலையிலேயே அவற்றை விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்தது. 

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, 

இல்லையா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய 

 திறந்த மன்றில் நேற்றையதினம் அறிவித்தார். இந்நிலையில் நேற்றைய 10 ஆம் நாள் பரிசீலனையின் போது, மனுதாரர் சார்பிலான பதில் வாதங்களும், 

தேர்தல்கள் ஆணைக் குழுவின் சார்பிலான விஷேட விளக்கமும் மன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் பரிசீலனைகள் நிறைவுக்கு வந்தன. 

அதன்படியே இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என இன்று அறிவிப்பதாக பிரதம நீதியசர் ஜயந்த ஜயசூரிய அறிவித்தார். 

7 மனுதாரர்களின் வாதங்கள், சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வாதங்கள், 15 இடையீட்டு மனுதாரர்களின் வாதங்கள் இந்த பரிசீலனையின்போது 

உயர் நீதிமன்றினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தையும், 

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்று 10 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்தது. பிரதம நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய 

தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் 

முன்பே இம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. இந்நிலையில், ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 

மனுக்களை விசாரணைக்கு எடுக்காது உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு