ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும்-காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

எங்கள் கைகளால் கொடுத்த உறவுகள் எவரும் தன்னிடம் இல்லை. அதுபற்றி எதுவும் தெரியாது என்று மேடைகளில் பேசிவிட்டு போக முடியாது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்று தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கின்றோம்.
இதன் போது தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக வும் இதனை கையாள்வதில் காலதாமதமாகி விட்ட தாகவும் தெரிவித்திருந்தார். அரசிடம் ஒப்படைக்கப் பட்ட எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறவேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடம் உள்ளது என்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இரவு பகலாக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது அந்த அமைப்பின் இணைப்பாளர் கலாறஞ்சினி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்த பின்னர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடம் உள்ளது. எங்கள் கைகளால் கொடுத்த உறவுகள் எவரும் தன்னிடம் இல்லை.
அல்லது அது பற்றி எதுவும் தெரியாது என்று மேடைகளில் பேசிவிட்டு போக முடியாது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்று தடவைகள் ஜனாதிபதியைச் சந்தித்து பேசியிருக்கின்றோம். இதன்போது தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் இதனை கையாள்வதில் காலதாமதமாகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
எங்கள் உறவுகள் திருவிழாக்கள் எதிலும் காணாமல்போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டவர். இரகசிய முகாம்களை பார்வையிடவும் அவர்களது பெயர்ப் பட்டியல்களை வெளியிடவும் கட்டளையை பிறப்பிக்கவும் தெரிவித்தவர். ஆனால் எதனையுமே ஜனாதிபதி செய்யவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் தொடர் பில் சர்வதேச அனுசரணையுடன் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். மாறுபட்ட கருத்துக்களை கூறி வரும் ஜனாதிபதியிடம் எப்படி எங்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியும். ஒருவருட காலத்திலும் கூட இந்த பெயர் விவரங்களை கூட வெளியிட முடியாத ஜனாதிபதியால் தீர்வு கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசத்தை கொடுத்துள்ளது. எங்களது உறவு களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை அரசாங்கம் தரவேண்டும் என்றார்.