சித்தமருத்துவ அலகின் முதலாவது ஆய்வு மாநாடு

ஆசிரியர் - Admin
சித்தமருத்துவ அலகின் முதலாவது ஆய்வு மாநாடு

யாழ்.பல்­க­லைக்­க­ழக சித்த மருத்­துவ அலகின் முத­லா­வது சர்­வ­தேச ஆய்வு மாநாடும் கண்­காட்­சியும் எதிர்­வரும் 23 ஆம் திகதி யாழில் நடை­பெ­ற­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் பேரா­சி­ரியர் ரட்ணம் விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

கைத­டியில் அமைந்­துள்ள சித்த மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், யாழ்.பல்­க­லைக்­க­ழக சித்த மருத்­துவ அலகும், வட­மா­காண சுதேச மருத்­துவத் திணைக்­க­ளமும், இந்­திய ஆயுர்வேத அமைச்சும் இணைந்து நடத்தும் முத­லா­வது சர்­வ­தேச ஆய்வு மாநாடும், கண்­காட்­சியும் எதிர்­வரும் 23 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை யாழில் நடை­பெ­ற­வுள்­ளது. 

கைத­டியில் அமைந்­துள்ள யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் சித்த மருத்­துவ அலகில் 23 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இக்­கண்­காட்­சியும் மாநாடும், 27 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை 5 மணி­வரை நடை­பெறும். இந்தக் கண்­காட்­சியின் போது, பயிற்சிப் பட்­ட­றை­களும் இடம்­பெ­ற­வுள்­ளன. வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் உள்ள பாரம்­ப­ரிய சித்த மருத்­து­வ­மு­றை­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­படும்.சித்த மருத்­து­வத்­தினை ஒரு குடையின் கீழ் மக்கள் பெற்­றுக்­கொள்­வ­தற்கு இக்­கண்­காட்சி ஒரு கள­மாக அமையும் என்றார்.

இந்த மாநாட்டின் போது, சித்த மருத்­துவ மாண­வர்­க­ளினால் ஆராய்ச்­சிக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட 205 ஆய்வுக் கட்­டு­ரை­களில் 175 ஆய்வுக் கட்­டுரைகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அந்த 175 கட்­டு­ரை­க­ளையும் அன்­றைய நாளில் சமர்ப்­பிக்­க­வுள்­ளனர்.

இக்­கண்­காட்சி மற்றும் மாநாட்டில் துறைசார் வல்லுநர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதா ரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் பங்குபற்றி பயன் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு