குருந்தூர் மலையையும் முதலமைச்சர் பாதுகாக்கவேண்டும்.

ஆசிரியர் - Editor I
குருந்தூர் மலையையும் முதலமைச்சர் பாதுகாக்கவேண்டும்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வவுனியா வடக்கு பிரதேசத்தில் உள்ள வெடுக்குநாறி மi லயை பாதுகாப்பதற்கும், அதனை யாத்திரிகர்கள் தலமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளமை பாராட்டத்தக்க முயற்சியாகும். அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் ம லையையும் சிங்கள குடியேற்றங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து  முதலமைச்சர் பாதுகாத்து தர வேண்டும்.


மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தி ல் தமிழ் மன்னர்களினதும், பூர்வ குடிகளினதும் வரலாற்று எச்சங்களுடன் உள்ள பாதுகாக்கப்படவே ண்டிய இடங்களாக வெடுக்குநாறி மலையும், குருந்தூர் மலையும் உள்ளன. இந்த இரு மலைகளும் அதனை சூழவுள்ள காடுகளும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் விழுங்கப்படும் ஆபத்திலிருக்கின்றன. 


கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் தனது அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை வெடுக்குநாறி மலைக்கு அனுப்பி அந்த மலையை பாதுகாப்பதற்கான நடவடிக்i ககளை எடுத்துள்ளார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேபோல் குருந்தூர் ம லையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் விழுங்கப்படும் அபாயத்தில் உள்ளது. 


இந்த விடயத்தை கடந்த மாகாணசபை அமர்வு நடைபெற்றபோது முதலமைச்ச ரை சந்தித்து சுட்டிக்காட்டியிருந்தேன். அதேபோல் எதிர்வரும் 19ம் திகதியும் இந்த விடயத்தை சுட்டி க்காட்டவுள்ளேன். இந்த விடயத்தையும் கவனத்தில் கொண்டு குருந்தூர் மலையை பாதுகாத்து தமிழ் மக்களுக்குரிய மலையாக வைத்திருப்பதற்கு முதலமைச்சர் ஆவண செய்யவேண்டும். அதனடிப்படையில் குருந்தூர் மலை பகுதி பாதுகாக்கப்படவேண்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு