இடர்கால நிவாரணம் 5 ரூபாய் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வழங்க பின்னடிக்கும் அதிகாரிகள்..! காரணம் என்ன? சுரண்டி தின்னப்பட்டதாக மக்கள் கூறுவது உண்மையா?

ஆசிரியர் - Editor I
இடர்கால நிவாரணம் 5 ரூபாய் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வழங்க பின்னடிக்கும் அதிகாரிகள்..! காரணம் என்ன? சுரண்டி தின்னப்பட்டதாக மக்கள் கூறுவது உண்மையா?

கொரோனா போிடர் காலத்தில் அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் வாழ்வாதார உதவியை பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்களை பூரணமாக வழங்க பிரதேச செயலர்கள் சிலர் பின்னடி ப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

குறித்த இடர்கால கொடுப்பனவு தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பயனாளிகளின் விபரங்களை பெறுவதற்கு சிலர் முயற்சித்த நிலையில் சில பிரதேச செயலர்கள், 

பயனாளிகளின் பெயர், அடையாள அட்டை இலக்கம், மற்றும் பிற தகவல்களுடன் பதிலளிக்கின்றனர். ஆனாலும் சில பிரதேச செயலர்கள் வெறும் பெயர்களை மட்டுமே வழங்குவதுடன் பிற தகவல்கள் தனிப்பட்ட தகவல்கள் என கூறுகின்றனர். 

இதன் பின்னர் பாரிய மோசடி ஒளிந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே குறித்த 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கலில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதற்கிடையில் 

தகவல் வழங்க பின்னடிப்பதன் பின்னணியில் மோசடிகளை மூடிமறைக்கப்படுகிறதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு