சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும்.

ஆசிரியர் - Editor I
சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை சர்வதேச சமூகமே பெற்றுக் கொடுக்கவேண்டும் என கூறியிருக்கும் காண மலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் உறவினர்கள் திருவிழாக்களில் காணாமல்போகவில்லை. எனவும் படையி னரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே காணாமல் போனார்கள். அவர்களுக்கான பதிலை அரசாங்கம் கூறவேண்டும். காணவில்லை என மேடையில் கூறிவிட்டு ஜனாதிபதி தப்பிச் செல்ல இயலாது. எனவும் கூறியிருக்கின்றனர். 


கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்;த மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் விடுதலைக்காக கடந்த ஒன்பது வருடங்களாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.  


 இதன் தொடர்ச்சியாக படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த ஆண்டு பெப்ரவரிமாதம் 20ம் திகதி தமது உறவுகளுக்கு நீதிகோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். 


மேற்படி போராட்டத்தை கடந்த ஒரு வருடமாக நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுஐடயை இணைப்பாளர் கலாநஞ்சினி ஊடகங்க ளுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 


போது யுத்தம் முடிந்த பின்னர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு என்னநடந்தது என்ற பதிலை சொல்ல வேண்டிய பொறுப்பு இலங்கை ஜனாதிபதியிடம் உள்ளது. 


நாங்கள் எங்கள் கைகளால் கொடுத்த உறவுகள் எவரும் தன்னிடம் இல்லை. அல்லது அது பற்றி எதுவும் தெரியாது என்று மேடைகளில் பேசிவிட்டு போக முடியாது. கடந்த ஆண்டு யூன்மாதம் முதல் மூன்று தடவைகள் ஜனாதிபதியைச்  சந்தித்து பேசியிருக்கின்றோம். இதன்போது தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் இதனை கையாள்வதில் காலதாமதமாகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.


எங்கள் உறவுகள் திருவிழாக்கள் எதிலும் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டவர்.  இரகசிய முகாம்களை பார்வையிடவும் அவர்களது பெயர்பட்டியல்களை வெளியிடவும் கட்டளையை பிறப்பிக்கவும் தெரிவித்தவர் ஆனால் எதனையுமே ஜனாதிபதி செய்யவில்லை.


காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் தொடர்பில் சர்வதேச அனுசரணையுடன் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வரும் ஜனாதிபதியிடம் எப்படி எங்களுக்கான நீதியை எதிர்பார்க்கமுடியும். ஒருவருட காலத்திலும் கூட இந்த பெயர் விபரங்களை கூட வெளியிட முடியாத ஜனாதிபதியால் தீர்வு இடைக்கும் என்பதில்எங்களுக்கு நம்பிக்கையில்லை.


இலங்கை அரசுக்கு சர்வதேச சமுகம் இரண்டு வருடகால அவகாசத்தை கொடுத்துள்ளது.அதில் ஒரு வருடகாலம் கடந்துள்ளது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எங்களது போராட்டம் எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாது கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்படுகின்றது.


ஆனால்இ பலரது ஆதரவும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பக்கபலமாகவுள்ளது. நாங்கள் கடந்த ஒன்பது வருடமாக அரசையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் நம்பி ஏமாந்து விட்டோம்இ ஒருவருட காலமாக எமது போராட்டம் எந்த தீர்வுகளுமின்றி நீண்டு செல்கின்றது. இனிவரும் நாட்களில் எமது போராட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.


இந்த ஒரு வருடகாலத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது உறவுகளுக்காக போராடியவர்களில் ஏழு பேர் வரையில் உயிரிழந் திருக்கின்றார்கள் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு