யாழ்.பல்கலைகழகத்திற்கு 100 சிமாட் தொலைபேசிகளை அன்பளிப்பு செய்த ஈழ தமிழரான அமொிக்க விஞ்ஞானி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்திற்கு 100 சிமாட் தொலைபேசிகளை அன்பளிப்பு செய்த ஈழ தமிழரான அமொிக்க விஞ்ஞானி..!

இலங்கை தமிழரான அமொிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா.சிவானந்தன் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள மாணவர்களுக்காக 100 சிமாட் தொலைபேசிகளை அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவா. சிவானந்தன் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து, 

யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும், பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக தொலைபேசிகளை யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி 

பேராசிரியர் க. கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கோவிட் 19 பரவலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் உலகளாவிய ரீதியில் 

கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி முறையினூடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான 

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இணையவழிக் கற்றல் வசதிகள் பற்றி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், திறன் பேசி வசதிகள் இல்லாத மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, 

அனுசரணையாளர்களின் மூலம் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, 

பேராசிரியர் சிவா. சிவானந்தன் 100 தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்ததையடுத்து, பீடாதிபதிகளின் சிபார்சுக்கமைய வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்தத் தொலைபேசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர் விருதான மாற்றத்துக்கான சாதனையாளர் விருது பெற்ற ஈழத்தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா. சிவானந்தன் தனது சிவானந்தன் 

ஆய்வு கூடத்தின் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களில் சூரிய சக்தி ஆய்வுக்காக பல வழிகளிலும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு