யாழ்.உரும்பிராயில் ஆட்டோவில் வந்து படையினர் மீது தாக்குதலாம்..! 3 இளைஞர்களை கைது..

ஆசிரியர் - Editor
யாழ்.உரும்பிராயில் ஆட்டோவில் வந்து படையினர் மீது தாக்குதலாம்..! 3 இளைஞர்களை கைது..

யாழ்.உரும்பிராய் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறி  3 இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கோப்பாய் சந்தியில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் ஓட்டோவில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 

பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Radio
×