யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! இதுவரை 66 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! இதுவரை 66 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் பாதிப்பு..

யாழ்.மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்தமையினால் சுமார் 66 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா கூறியிருக்கின்றார். 

“அம்பான்” புயலின் தாக்கம் நாட்டின் பல பாகங்களில் உணரப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்திலும் நெடுந்தீவு, உடுவில், நல்லுார், பருத்துறை ஆகிய பகுதிகளில் கடந்த 17ம் திகதி தொடக்கம் அவ்வப்போது உணரப்பட்டுள்ளது. 

இதனால் மாவட்டத்தில் 47 வீடுகள் சேதமடைந்துள்ளது. 66 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மாவட்டத்தில் மிகை வேகமான காற்று அவ்வப்போது வீசும் நிலையில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். 

குறிப்பாக கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானத்துடன் இருப்பது நல்லது என கூறியிருக்கும் உதவி பணிப்பாளர், மாவட்டத்தின் பாதிப்பு நிலமைகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பட்டுள்ளது. 

எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு