ஆபத்தான நிலை தொடர்கிறது..! ஆயிரத்தை எட்டும் நோயாளர் எண்ணிக்கை, தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு கூறுவதென்ன..?
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டுகின்ற நிலையில் ஆபத்தான நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 424 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
149 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி
இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.