காட்டி கொடுத்து பிழைப்பு நடத்தியவர்களுடன் இணையவேண்டிய தேவை எமக்கில்லை.

பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பிரதேச சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்து ஆ ட்சியமைக்கும். கடந்த காலத்தில் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்தவர்களின் ஒத் துழைப்பு தேவையில்லை.
என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ றுப்பினர் சி.சிறீதரன், முசுகேசு சந்திரகுமாரின் ஆதரவு தேவையில்லை எனவும் கூறியிருக்கிறார்.
பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் தம்மிடம் ஆதரவு கேட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் நேற்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போது கூறியிருந்தார்.
இந்த கருத் து தொடர்பாக கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்
ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து பிழைத்தவர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சியமைக்கவேண்டிய தேவை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இல்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்து ஆரோக்கியமான ஆட்சியை அமைக்கும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினராக நான் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கும் நிலையில் என்னை மீ றி தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் சந்திரகுமாருடன் பேசியதா? ஒருபோதும் பேசியிரு க்காது.
தமிழ் மக்களை காட்டி கொடுத்து பிழைத்தவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க அ ல்லது பங்காளிகளாக இணைக்கவேண்டிய தேவை தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்பீடத்தி
ற்கு இல்லை. சந்திரகுமார் மக்களை குழப்பி எதாவது நன்மை பெறலாமா? என பார்கிறார்.
கெ hள்கை அற்றவர்களுடன் இணைந்து எங்களுடைய கொள்கைளை மீறி சந்திரகுமாருடன் ஆ ட்சியமைக்கவேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் சந்திரகுமாரின் தலைக்கனத்திற்கு மக்க ள் அடுத்தடுத்த தேர்தல்களில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மேலும் தமிழ்தேசிய கூட்டமை
ப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 சபைகளிலும் தனித்து ஆரோக்கியமான ஆட்சியை அமைக்கும், அதன் ஊடாக மக்களுக்கு சிறந்த சேiவை வழங்கும் என்றார்.