யாழ்.உடுப்பிட்டியில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் சிக்கியது..! திருடர்கள், போதை வியாபாரிகள் என மக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுப்பிட்டியில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் சிக்கியது..! திருடர்கள், போதை வியாபாரிகள் என மக்கள் குற்றச்சாட்டு..

யாழ்.வல்வெட்டித்துறை- உடுப்பிட்டி பகுதியில் திருட்டு மற்றும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள், சிகரட் போன்ற பொருட்கள் திருடிய நிலையில்

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னர் நடைபெற்ற விசாரணைகளில் பல விடயங்கள் தொியவந்திருப்பதாக கூறப்படுகின்றது. 

வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபடுதல், போதைப் பொருள் வியாபாரம் போன்றவற்றில் இந்த குழுவுக்கு தொடர்புள்ளதாக மக்கள் கூறுகின்றனர். 

உடுப்பிட்டி பகுதியில் தனித்திருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளையிடப்பட்ட சம்பவம் உள்ளிட்ட 8 சம்பவங்கள்

கடந்த 3 மாதங்களில் இடம்பெற்றிருப்பதாக கூறும் மக்கள், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பித்துக்கொள்ள 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண் அடைய முற்பட்டுள்ளார். எனினும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் 

சந்தேக நபரை திருப்பி அனுப்பியிருந்த நிலையில் காவல்துறையால் கைதாகியிருந்தார். அவர் வழங்கிய தகவலையடுத்து உடுப்பிட்டி,

யாழ்.வீதியை சேர்ந்த மற்றொரு நபர் கைதாகியுள்ளார். இந்நபரே கொள்ளையின் மூலம் மாடி வீடு, வர்த்தக கடைத்தொகுதியென இருந்து வருவதும் 

கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைதாகியுள்ளனர்.

மேலும் சிலரை தேடி வருவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை காவல்நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி 

மற்றும் விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக கொள்ளை கும்பல்கள் பிடிக்கப்பட்டுவருகின்றது.

அண்மையில் வல்வெட்டியை சேர்ந்த கும்பல் அகப்பட்டிருந்தது.அவர்களிடம் தங்கத்தை பவுண் 15 ஆயிரத்திற்கு வாங்கி நகை கடை உரிமையாளரது 

மனைவியும் கைதாகியிருந்தார்.குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டமை 

கல்வி புலத்தில் பேரதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. அதிலும் கொரோனா தொற்றினால் பாடசாலைகள் முடங்கியுள்ள நிலையில் 

மாணவர்களிடையே போதைபொருள் விநியோகிக்கப்பட்ட மாணவ சமூகம் சீரளிக்கப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள

கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு