த.தே.கூட்டமைப்பின் அழைப்பை நிராகரித்துவிட்டோம்.

பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்திலிருந்து அழைப்பு வந்தபோதும் நாம் அதனை நிராகரி த்துள்ளோம். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கூறியுள்ளார்.
மேலும் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக தாம் செயற்படப்போவதில்லை. எனவும் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அ வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாண ம க்கள் மாற்றத்தை விரும்பியுள்ளார்கள்.
அதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பலமிழந்து போயி ருக்கின்றது. 2015ம் ஆண்டு தேர்தலில் 73 வீதமான வாக்குகளை பெற்ற தமிழ்தேசிய கூட்
டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 45 வீதமான வாக்குகளையே பெற்றிருக்கின்றது. மக்கள் மாற்றத்தை விரும்பி நிற்கின்றமைக்கு இதுவே நல்ல உதாரணமாகு ம்.
இவ்வாறான நிலையில் பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளில் ஆட்சியமைப் பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது. ஆனா
ல் அந்த அழைப்பை நாங்கள் நிராகரித்திருக்கின்றோம். தமிழ் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நாங்கள் மீறமாட்டோம்.
மேலும் மேற்படி இரு சபைகளிலும் தமிழ்தேசிய கூட்டமை ப்பு ஆட்சியமைத்தாலும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு மட்டுமே நாங்கள் ஆத ரவளிப்போம் என கூறினார். இதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஈ.பி.டி.பி வெளியில் இருந்து ஆதரவு வழங்க உள்ளமை தொடர்பாக கேட்டபோது, நானும் அந்த விடயத்தை அறி ந்திருக்கிறேன் என்றார்.
தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி தொடர்பிலும் மற்றய கட்சிகள் தொடர்பிலும் தேர்தலுக்கு முன் கொண்டிருந்த நிலைப்பாடு தொடர்பாகவும், தேர்தலு க்கு பின் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டபோது, தமிழ்தேசிய கூட்டமைப்பா
னது ஆட்சியமைப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றய கட்சிகளுடன் கூட்டு சேருவ து அருவருக்கத்தக்க செயல்.
ஆட்சியமைப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு எந்த நிலைக் கும் செல்லும் என்பதற்கு இது உதாரணம் என்றார்.