SuperTopAds

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மீண்டும் அறிவிப்பு..! 18ம் திகதி தளரும் ஊரடங்கு 23ம் திகதி அமுலாகும்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மீண்டும் அறிவிப்பு..! 18ம் திகதி தளரும் ஊரடங்கு 23ம் திகதி அமுலாகும்..

கொழும்பு, ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் 23ம் திகதி வரையில் வழக்கமாக உள்ளதுபோல் 9 மணித்தியாலங்கள் தளர்த்தப்படும். 

மேற்கண்டவாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது, அதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல்

 அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை 

வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 ஆம் திகதி திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைத்திட்டம் இன்று சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு, 

18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. 

எனவும் அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.