மக்களையும், ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்து பொலிஸார் அடாவடி..! எதிர்ப்பை மீறி 4ம் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக..

ஆசிரியர் - Editor I
மக்களையும், ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்து பொலிஸார் அடாவடி..! எதிர்ப்பை மீறி 4ம் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் நினைவு நாள் குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகை சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்த லில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், 

நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தவர்களையும், குறிப்பாக ஊடகவியலாளர்களையும் தனித்தனியாக தனது தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். 

மேலும் சமூக இடைவெளி பேணப்படவில்லை. என பொலிஸார் குற்றஞ்சாட்டியதுடன், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் கைது செய்வேன் என அச்சுறுத்தியிருந்தார். இதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் 

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் குறித்த பொலிஸ் அதிகாரிக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு