யாழ்.நவாலி- சென் பீற்றர்ஸ் தேவாலய சுற்றாடலில் இராணுவம், பொலிஸ் குவிப்பு..! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்ப்பை மீறி நடைபெற்றது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நவாலி- சென் பீற்றர்ஸ் தேவாலய சுற்றாடலில் இராணுவம், பொலிஸ் குவிப்பு..! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்ப்பை மீறி நடைபெற்றது..

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாள் நினைவேந்தல் இன்று காலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் பொலிஸார், இராணுவத்தின் கடுமையான எதிர்ப்பை மீறி இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் விமானத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் நினைவதூபியில் 

சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த அஞ்சலி நிகழ்வுக்கு மானிப்பாய் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டது. எனினும் பின்னர் அஞ்சலி நிகழ்வு செலுத்தப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் நிகழ்வுகள் முடியும் வரை பொலிஸார் கலந்து கொண்டவர்களை ஊடகவியலாளர்கள் என அனைவரையும் தொலைபேசி ஊடாக கானொளி பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு