யாழ்.மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் ஊரடங்கு காலத்தில் உழைத்துவிட்டார்..! தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் ஊரடங்கு காலத்தில் உழைத்துவிட்டார்..! தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டிருந்தபோது யாழ்.மாவட்டத்திற்கு கட்டிட பொருட்கள் கொண்டுவருவதற்கான அனுமதியை வழங்க மூத்த உத்தியோகஸ்த்தர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டிருக்கின்றது. 

ஊரடங்குவேளையில் பிற மாவட்டங்களிற்கு சென்று வருவதற்கான அனுமதி மாவட்டச் செயலகங்களிலேயே வழங்கப்பட்ட நிலையில் குறித்த அனுமதியை பெற்று வெளியாருக்கு மோசடியாக வழங்கப்பட்டதாகவே குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு நேரில் சமர்ப்பிக்கப்படாததோடு அனுப்பியவரின் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்படவில்லை. இதேநேரம் கொழும்பு வெள்ளவத்தையின் 59ம் ஒழுங்கையினை முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளதனால் குறித்த முறைப்பாடு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கையில் கரிசணை கொண்ட ஓர் உத்தியோகத்தர் தொடர்பிலேயே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு