சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்து அல்ல! - சம்பந்தன்

ஆசிரியர் - Admin
சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்து அல்ல! - சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ள கருத்துக்களை, கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை.

எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.” என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Radio
×