முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்தவிடாது பொலிஸார், இராணுவம் அடாவடி..! யாழ்.செம்மணியில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நினைவேந்தல் இன்று காலை யாழ்.செம்மணி பகுதியில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டும் செம்மணி படுகொலை நினைவிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிகழ்வை நிறுத்தியுள்ளதுடன்.

அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு பணித்துள்ளனர். எனினும் சமூக இடைவெளியை பேணியே நிகழ்வு நடத்தப்படும் என ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக கூறியபோதும் பொலிஸார் விடாப்பிடியாக வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து சமூக இடைவெளியை பேணி நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.









பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு