நாகர்கோவிலில் இராணுவத்தினரால் தேடப்பட்ட முன்னாள் போராளி பொலிசில் சரண்!

ஆசிரியர் - Admin
நாகர்கோவிலில் இராணுவத்தினரால் தேடப்பட்ட முன்னாள் போராளி பொலிசில் சரண்!

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில், இராணுவத்தினரால், தேடப்பட்டு வந்த, முன்னாள் போராளி ஒருவர் நேற்று சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பலமுறை சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக, நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்தனர்.

குறித்த போராளி இரு வாரங்களுக்கு முன்னர் தனது சட்டத்தரணி ஊடாக முன்னிலையாகியிருந்தார். அப்போது, அவ்வாறு ஒரு சந்தேக நபரை தாங்கள் தேடவில்லை என பொலிஸாரால் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த8ஆம் திகதி நள்ளிரவு குறித்த இளைஞனின் வீட்டுக்குள் நுழைந்த படையினர், அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கி, இரண்டு மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதுடன், 500 லீட்டர் மண்ணெண்ணெயும் நிலத்தில் ஊற்றி நாசப்படுத்தினர்.

இந்தநிலையில் குறித்த முன்னாள் போராளி நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைய சென்ற நிலையில், நீதிமன்ற கடமைநேரம் முடிந்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு