SuperTopAds

தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் சமூக மட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட அடையாளம் காணப்படவில்லை..! நாம் தமிழர்களை அப்படி பாதுகாத்தோம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் சமூக மட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட அடையாளம் காணப்படவில்லை..! நாம் தமிழர்களை அப்படி பாதுகாத்தோம்..

யாழ்.மாவட்டத்தில் சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சிலர் கொரோனா தொற்றுக்குள்ளா ன நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்கி அவர்களை இராணுவம் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்கள்.

என கூறியிருக்கும் கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டி னன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, தமிழ் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளி க்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார். 

தொலைபேசி வழியாக பிரபல சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் கூறிய அவர், யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால், சமய நிகழ்வொன்றில் பங்கேற்ற சிலர் அடையாளம் காணப்பட்ட போதிலும், 

அவர்கள் கண்காணிப்பு நிலையங்களுக்கு உட்படுத்தப்பட்டு முப்படையினர் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், தமிழர் அதிகளவில் வாழும் பகுதிகளில் சமூகத்திற்குள் இருந்து ஒரு கொரோனா தொற்றாளரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

அவ்வாறு முப்படையினர் தமிழர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டதாகவும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார். அத்துடன், இரண்டு மாதம் என்ற மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் கோவிட் தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்கள் ஒழுக்கத்துடனும், சமூக இடைவெளியை பேணியும், சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றியும் நடந்துக்கொண்டால் கோவிட் தொற்றை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.