யாழ்.நெடுந்தீவில் நடப்பதென்ன? இலங்கை முழுவதும் விற்பனை செய்யப்படும் வெற்றிலைக்கு நெடுந்தீவில் தடை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் நடப்பதென்ன? இலங்கை முழுவதும் விற்பனை செய்யப்படும் வெற்றிலைக்கு நெடுந்தீவில் தடை..

நாடு முழுவதும் வெற்றிலை, பாக்கு மக்களால் கொ ள்வனவு செய்ய முடியும். இவ்வாறான நிலையில் யாழ்.நெடுந்தீவில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு கொழுத்தப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவில் உள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வெற்றிலை, பாக்கு இருப்பின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் அவற்றினை பறிமுதல் செய்வதாகவும் அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பொருட்களை நீதிமன்றிலும் முற்படுத்தாது பிரதேச சபையின் தவிசாளர் முன்பாகவே தீயிட்டு எரிக்கின்றனர். 

யாழ். நகர்ப் பகுதியில் நூற்றுக் கணக்கான வெற்றிலை கடைகளிலும் குடாநாட்டின் சகல சந்தைகளிலும் அனுமதிக்கப்படும் குறித்த வர்த்தகம் நெடுந்தீவில் மட்டும் மறுக்கப்படுவது தொடர்பில் மாவட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அல்லது நெடுந்தீவு யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்தில் இல்லையா?

என்பதனை தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.இது தொடர்பில் நெடுந்தீவு சுகாதார உத்தியோகத்தரின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான வேலணை சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டால் சட்டத்தின் பிரகாரம் வெற்றிலை, பாக்கு விற்பனை செய்ய முடியாது. 

ஆனால் ஏனைய உத்தியோகத்தர்கள் அதனை நடைமுறைப்படுத்துவது கிடையாது. இருப்பினும் நெடுந்தீவு உத்தியோகத்தர் அமுல் செய்கின்றார். எனப் பதிலளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு