யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படகூடாது, யாழ்.மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படகூடாது, யாழ்.மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தல்..!

யாழ்.மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று பரவாத வகையில் சுகாதா ர நடைமுறைகளை இறுக்கமாக்குவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், 

சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகள் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அபாய வலயங்க ளில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்படுவர் எனவும் கூறியிருக்கின்றார். 

யாழ். வணிகர் கழத்தினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து மற்றும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வருபவர்கள் எதிர்நோக்கும் பாஸ் நடைமுறை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், சுகாதார நடைமுறைக்கு ஏற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களின் நன்மை கருதியே என்பதுடன் 

2 மாதகாலமாக முன்னெடுக்கப்படும் நடைமுறைகளை வலுப்படுத்தும் முகமாக தொடர்ந்தும் சுகாதாரத்துடன் கூடிய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதனைவிட, 

கொழும்பில் இருந்து யாழிற்கு வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அடிக்கடி வர்த்தக ரீதியாக கொழும்புக்குச் சென்று வருபவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாத வண்ணம் சில நடைமுறைகளைப் பின்பற்ற உத்தேசித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு