யாழ்ப்பாணத்தில் 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ் காங்கிரஸ்!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ் காங்கிரஸ்!

யாழ். மாநகரசபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி சபைகளில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன், ஆட்சியமைக்க தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சித்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“ யாழ்ப்பாணம் மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை, கரவெட்டி பிரதேச சபை, பருத்தித்துறை நகரசபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய சபைகளில் தாம் ஆட்சியமைக்க முயற்சித்து வருவதாகவும், இந்தச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் தம்முடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.