யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய நிவாரணம் அரசியல்வாதியிடம் கொடுக்கப்பட்டதா..? அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறது விசாரணை குழு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய நிவாரணம் அரசியல்வாதியிடம் கொடுக்கப்பட்டதா..? அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறது விசாரணை குழு..

யாழ்.மாவட்டம் ஊரடங்கு சட்டம் மற்றும் கொரோனா அபாயத்தினால் முடக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடையாளர்களினால் வழங்கப்பட்ட நிவாரணை பொருட்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இன்னாள் வேட்பாளருமான ஒருவரின் ஆதரவாளர்களிடம் வழங்கப்பட்டதா?  என்பது குறித்து விசாரணை நடாத்த தேர்தல் ஆணைக்குழு விசாரணை குழுவை அமைத்துள்ளது. 

3 விசாரணையாளர்களை கொண்ட இந்த விசாரணைக்குழு அடுத்தவாரம் யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்து விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தொியவருகின்றது. அதற்கு முன்னர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆரம்பத் தகவல்களை அறிக்கையாள வழங்குமாறு யாழ்.மாவட்ட பிரதி தெர்தல் தொிவத்தாட்சி அலுவலருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருக்கின்றது. 

இந்த தகவல்களை அண்மையில் நடைபெற்ற கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்குமிடையிலான சந்திப்பின்போது தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கின்றார். இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகும் முன்பதாகவே ஆணைக்குழுவின் தலைவரால், 

குற்றச்சாட்டுக்குள் குறிப்பிடப்படும் பெயரிடப்படாத அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வேட்பாளர் மீதும் விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு