பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு..! அடுத்து வழக்கு, மக்கள் சந்திப்பின் மணிவண்ணன் கருத்து..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு..! அடுத்து வழக்கு, மக்கள் சந்திப்பின் மணிவண்ணன் கருத்து..

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக் குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

மேற்கண்டவாறு அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணி வண்ணன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக

பொதுமக்களே மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைய ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு கொடுப்பதற்கான வழிப்படுத்தல்களை செய்திருக்கின் றோம். அதேபோல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை

பிணையில் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடு த்திருக்கின்றோம். இந்நிலையில் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு ம ற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள

முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவ்வாறு எடுக்கப்படாத பட்டசத்தில் உடனடியாக பொதுமக்கள் சார்பில் பொலிஸாருக்கு எதி ராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு நாம் தீர்மானித்திருக்கிறோம். 

இது தொடர்பாக இன்று குடத்தனைக்கு நோில் சென்றிருந்தோம். மக்களுடன் குறித்த விடயம் தொடர்பாக பேசியுள்ளோம். அங்கு பலர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக் காகியிருக்கின்றார்கள். இவற்றை கருத்தில் எடுத்து, 

கூடியவிரைவில் சட்டநடவடிக்கைக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு