கொரோனாவிடம் ஒருபோதும் மண்டியிட மாட்டோம்!

ஆசிரியர் - Admin
கொரோனாவிடம் ஒருபோதும் மண்டியிட மாட்டோம்!

தீவிரவாதத்துடன் போராடி வெற்றி பெற்ற நாம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேதின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.

“உலக தொழிலாளர் தினத்தன்று கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக போராடும் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அனைவரும் சௌபாக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். 

உலகவாழ் தொழிலாளர்கள் இம்முறை கொவிட்-19 நோய் தொற்று சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய, சமய வைபவங்களைப் போன்று இம்முறை தொழிலாளர் தினத்தையும் வழமையான செயற்பாடுகள் இன்றி கொண்டாட வேண்டியுள்ளது. 

தொழிலாளர்களின் பலம், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்வலங்கள், கூட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் எமது பலத்தினை வெளிப்படுத்தும் வழிமுறை உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio
×