வடக்கில் அடையாளம் காணப்பட்ட 22வது நோயாளி ஒரு பெண்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே கொரோனா தொற்று உறுதியானது..

ஆசிரியர் - Editor I
வடக்கில் அடையாளம் காணப்பட்ட 22வது நோயாளி ஒரு பெண்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே கொரோனா தொற்று உறுதியானது..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்றைய தினம் 76 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டி ருந்த நிலையில் 75 பேருக்கு தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையா ளம் காணப்பட்டிருக்கின்றார். 

தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர் ஒரு பெண் என்பதுடன், குறித்த பெண்ணுடைய சகோதரன் இம்மாதம் 13ம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்.போத னா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டிரந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

* ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.

* வவுனியா பொது வைத்தியசாலை - 3 பேர்.

* முல்லைத்தீவு பொது வைத்தியசாலை - ஒருவர்.

* முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.

* முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் - 54 பேர். (வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் )

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு