ஆபத்தை உண்டாக்கும் வகையில் செயற்படுகிறதா இராணுவம்..? தனிமைப்படுத்தல் நிலைய கழிவுகளை யாழ்.கிளாலியில் கொட்டுகின்றனர்..

ஆசிரியர் - Editor I
ஆபத்தை உண்டாக்கும் வகையில் செயற்படுகிறதா இராணுவம்..? தனிமைப்படுத்தல் நிலைய கழிவுகளை யாழ்.கிளாலியில் கொட்டுகின்றனர்..

யாழ்.தென்மராட்சி- விடத்தல்பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கிளாலியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கொட்டப்படுகின்றது. 

இது குறித்து ஊடகவியலாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து ஊடகவியலாளர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மேலும் குறித்த தகவல் வெளியான நிலையில், 

உடனடியாக அங்கு சென்ற இராணுவத்தினர் கழிவுகளை வெட்டி புதைத்துள்ளனர். ஆபத்தான இந்த நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் அவதானத்தில் எடுக்கவே ண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு