யாழ்.பொலிஸார் அதிரடி..! யாழ்.நகரை கலக்கிய 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை மடக்கி பிடித்தது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸார் அதிரடி..! யாழ்.நகரை கலக்கிய 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை மடக்கி பிடித்தது பொலிஸ்..

யாழ்.நகரில் பல இடங்களில் வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான வீட்டு உபகரணங்களை திருடிய 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார் வீதி 

ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 சந்தேக நபர்களே நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக உள்ள காணியில் 

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பணிகள் ஊரடங்கு நடைமுறையால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்ட கட்டட பொருள்கள், 

ரில்லர்கள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர இலத்திரனியல் வர்த்தக நிலையங்கள் இரண்டில் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் திருட்டு மற்றும் திருட்டுப் பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 

8 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பெறுமதியான திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர். 

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் சிறு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.எம்.ஆர்.சி. முனசிங்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 

ஹர்சன், ஹபுலியட்ட, கவியரசன், ரஞ்சித், கிங்ஸ்லி, மரியசிறி, உபாலி, ரட்ணாயக்க,சுரேகா உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு