யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரிக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துவரவில்லை..! மக்கள் அச்சமடையவேண்டாம், இராணுவம் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரிக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துவரவில்லை..! மக்கள் அச்சமடையவேண்டாம், இராணுவம் விளக்கம்..

கடமைகளுக்கு அழைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை 21 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காகவே கல்வியற் கல்லுாரி இராணு வத்தினரால் பொறுப்பேற்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் உண்டாகாது. 

என கூறியிருக்கும் இராணுவத்தினர், மக்கள் அச்சமடையவேண்டாம். எனவும் கூறியிருக்கின்றனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்ற இராணுவத்தினர்,

மீள கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை கொரோனா தொற்றுடைய எவரையும் கல்லூரிக்கு அழைத்து வரவில்லை யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி 

விடுமுறையில் நிற்கின்ற படைவீரர்களையே தனிமை படுத்துவதற்காகவே கல்லூரியில் 2 விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. என கூறப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு